Monday 16 April 2012

பரிமுகன் அருளும் செல்வம்






தேவநாதன் கோயிலில் ஸ்ரீராமன் சீதை, லட்சுமணன், அனுமனுடன் தனி சந்நதியில் கொலுவிருக்கிறார். இந்த ராமரின் தோற்றம் சற்றே வித்தியாசமானது. இடது கரத்தால் வில்லினையும் வலது கரத்தால் அம்பினையும் பற்றியிருக்கிறார். பொதுவாக வலது கரத்திலேயே வில்லைப் பற்றியிருக்கும் இவர் பக்தர்கள் நலம் கருதி இந்தத் தலத்துக்கு வரும் பக்தர்களுக்கு ஏதேனும் ஆபத்து என்றால் உடனே வலது கையிலிருக்கும் அம்பை இடது கரத்திலுள்ள வில்லில் பூட்டி, அந்த ஆபத்தை உடனே குத்தி எறிந்துவிடும் பரிவுதான் காரணம். 


இளவல் லட்சுமணனும் அவ்வாறே காட்சியளிக்கிறார். வடலூர் ராமலிங்க அடிகள், ‘வெவ்வினை தீர்த்தருள்கின்ற ராமா’ என்று இவரைப் பாடிப் பரவசப்பட்டிருக்கிறார்.
இங்கு தரிசனமளிக்கும் லட்சுமி நரசிம்மரும் வித்தியாசமானவரே. இவர் மஹாலக்ஷ்மியைத் தன் வலது பாகத்தில் ஏந்தியபடி சேவை சாதிக்கிறார். தன்னுடைய இந்த அபூர்வ திருக்கோலத்தை தரிசிப்பவர்களுக்கு வாழ்வில் எல்லா வளங்களையும் அள்ளித் தருகிறார், இவர்.


ராஜகோபாலன், வேணு கோபாலன், ரங்கநாதர், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், ஆழ்வார்கள் ஆகியோருக்குத் தனித்தனி சந்நதிகள் அமைந்து, கோயிலுக்கு மேலும் அழகூட்டுகின்றன.
மார்க்கண்டேயர் சிவபெருமானிடமிருந்து ‘என்றும் பதினாறு’ என்ற சிரஞ்சீவித்துவம் பெற்றுவிட்ட போதிலும் முக்தியாகிய பேரின்பத்தைத் தன்னால் அடைய முடியவில்லையே என்ற வருத்தம் அவருக்கு மேலிட்டது. அவர் இத்தலத்தின் அருகே சௌகந்திக வனம் என்ற காட்டை அடைந்து தனக்குக் கேட்ட அசரீரி வாக்குப்படி தவம் மேற்கொண்டார். அந்த தவத்தின் பயனாக தாமரை மலரைத் தன் இருப்பிடமாகக் கொண்ட மூன்று வயதுப் பெண் குழந்தையை அவர் கண்டார். அந்தக் குழந்தை, அருகிலிருந்த கடல் அலைகளைப் பார்த்து மகிழ்ந்ததால், அதற்கு தரங்காநந்தினி (தரங்கம் என்றால் அலை; ஆனந்தினி என்றால் மகிழக் கூடியவள்) என்றுப் பெயரிட்டு வளர்த்து வந்தார். அவள் திருமணப் பருவத்தை எட்டியபோது, ஒரு தந்தைக்குரிய கடமையினை நிறைவேற்ற வேண்டுமே என்று பொறுப்பால் வேதனை கொண்டார் மார்க்கண்டேயர்.
எம்பெருமான் அவருக்குப் பிரத்யட்சமாக, தன் மகளை அவர் ஏற்க வேண்டும் என்றும் அந்தத் தலத்திலேயே அவர் நிலை கொண்டு அருள்பாலிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார், மார்க்கண்டேயர். உடனே ஆதிசேஷன், பெருமாள் தங்குவதற்கு வசதியாக இங்கே ஒரு நகரத்தையே சிருஷ்டித்தார் என்கிறது, புராணம். 
இந்த நகரை பெருமாளுக்கு அர்ப்பணித்ததால் இது திருஅசீந்திரபுரம் என்று வழங்கப்பட்டது.
தேவநாதப் பெருமாளுக்கு, வருடம் பூராவும் ஒவ்வொரு நாளும் உற்சவத் திருநாளே!. குறிப்பாக புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமையன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகிறார்கள். 
தினமுமே பக்தர்கள் பெருமாள் சந்நதிக்கு முன் திருமண பந்தத்தில் ஒன்றுபடுகிறார்கள்.\
மலைமீது 74 படிகளும் ராமானுஜர் ஏற்படுத்திய 74 சிம்மாசனாதிபர்களைக் குறிக்கும் 74 படிகளை ஏறிச் சென்றால் ஹயக்ரீவரின் திவ்ய தரிசனம் கிட்டுகிறது.  
இந்தப் படிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15ம் நாள் படிபூஜை நடத்தப்படுகிறது. 
ஔஷத கிரி என்னும் மலைமீது நிலவும் ஏகாந்தமும் மூலிகை மணம் சுமந்துவரும் மென்காற்றும் நம் உள்ளத்தையும் உடலையும் வருடிச் செல்கிறது. 
. அனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்துக் கொண்டு, போரில் மூர்ச்சித்திருந்த லட்சுமணனைக் காப்பதற்காக வந்தபோது, அந்த மலையிலிருந்து விழுந்த ஒரு பகுதிதான் இந்த மலை என்கிறது புராணம். 

அதோடு, சஞ்சீவி மலையில் அனுமனுக்கு சஞ்சீவி மூலிகையை அடையாளம் காட்ட ஹயக்ரீவர் உதவினார் என்றும் புராணம் விவரிக்கிறது. அனுமன் எடுத்துச் சென்றபோது கீழே விழுந்த மலையின் ஒரு பகுதியோடு ஹயக்ரீவரும் சேர்ந்து இங்கே தரையிறங்கினார்.
முன் இவ்வுலகேழும் இருள் மண்டி உண்ண
முனிவரோடு தானவரும் திசைப்ப வந்து
பன்னுகலை நால்வேதப் பொருளை எல்லாம்
பரிமுகமாய் அருளிய நம்பரமன்
என்று ஹயக்ரீவரைப் பாடித் தொழுதிருக்கிறார், திருமங்கையாழ்வார்.
இந்தப் பரிமுகன், கல்வியும் ஞானமும் அருளவல்லவர். பரீட்சைக்கு ஆயத்தமாகும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது ஐ.ஏ.எஸ் போன்ற தேர்வு எழுதுபவர்களும் இவரது ஆசி பெற்றுச் சென்று வெற்றிவாகை சூடுகிறார்கள். 
பிறவியிலேயோ அல்லது இடைப்பட்ட ஏதேனும் காரணத்தாலோ பேச்சிழந்த குழந்தைகள் இந்த ஹயக்ரீவர் சந்நதியில் கால் பதித்தாலே உடனடி நிவாரணம் பெறுகிறார்கள். கிரகங்கள் அல்லது வேறுவகை தோஷங்களும் நிவர்த்தியாகின்றன.
இந்த ஹயக்ரீவருக்கென்று பிரத்யேகமாக
ஒரு ஸ்லோகம் இருக்கிறது:
ஞானானந்த மயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக் ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம்
ஹயக்ரீவம் உபாஸ்மஹே
அதாவது, ஞானமயமாகத் திகழ்கிறார் ஹயக்ரீவர். கலக்கமற்ற ஸ்படிகம் போல ஒளிர்பவர். இவரே அனைத்து வித்தைகளுக்கும் ஆதாரமானவர். இவரை உபாசித்தால் கல்வி, ஞானத்தில் மேம்பட முடியும் என்று பொருள்.
திருவஹீந்திரபுரம் சென்று தேவநாதனையும் ஹயக்ரீவரையும் தரிசிக்கும்வரை கீழ்க்காணும் தியான ஸ்லோகத்தைச் சொல்லிக் கொண்டிருக்கலாம்:
சித்தேமே ரமதாம் அஹீந்த்ர நகராவாஸீ துரங்கோந் முகா நந்த:
ஸ்ரீ ஸகதைவ நாயக ஹரி: தேவேந்த்ர ஸாக்ஷாத் க்ருத:
பூர்வாம் போதி முக: ககேந்த்ர ஸரிதஸ் தீராச்ரயஸ் ஸர்வதா,
ச்லாக்யே சந்த்ர விநிர் மிதேச பகவாந் திஷ்டந் விமாநோத்தமே
பொதுப் பொருள்:அஹீந்த்ர நகர் எனும் திருவஹீந்திரபுர திவ்ய தேசத்தில் எழுந்தருளியிருக்கும் தெய்வநாயகன் என்ற தேவநாதப் பெருமாளே நமஸ்காரம். வைகுண்டநாயகித் தாயாருடன், சந்திரனால் அமைக்கப்பட்ட இந்திர விமான நிழலில், கருட நதி தீரத்தில், கிழக்கு நோக்கி நின்ற திருக்
கோலத்தில் காட்சி தரும் எம்பெருமானே நமஸ்காரம். தேவேந்திரனுக்குக் காட்சியளித்த பெருமாளே, என் சித்தத்தையும் இன்புறச் செய்வீர்களாக.
கடலூரிலிருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கிறது திருவஹீந்திரபுரம் சென்னைகடலூர் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகவும் செல்லலாம். 



Monday 26 March 2012

லஷ்மி குபேர பூஜை









 மஹாலஷ்மி மலரின் அழகு. அருள் பார்வையுடன் திகழும் செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி. 

இலட்சுமி திருபாற்கடலில் இருந்து அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் (செந்தாமரையில்) வீற்றிருக்கிறாள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது. முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள். இவளுக்குத் தனிக் கோயில் இருக்குமிடம் திருப்பதியிலுள்ள திருச்சானூர்.


யானைகளின் பெயரால் அவள் கஜலட்சுமி என்றழைக்கப்படுகிறாள். அவள் பாற்கடலில் இருந்து வெளிப்பட்டதும், அஷ்டதிக்கு கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் தமது மனைவியரான பெண் யானைகளுடன், அவளுக்கு மங்கல நீராட்டின என்று புராணங்கள் கூறுகின்றன. 

பல்லவர்கள் அமைத்துள்ள குடைவறைக்கோயில்களில் பலவற்றில், யானைகள் நீரை முகந்து நீராட்ட, தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளைக் காண முடியும். யானைகளின் பிளிறலை இலட்சுமி விரும்பிக்கேட்கிறாள் என வேதமந்திரமான ஸ்ரீசூக்தம் கூறுகிறது.  


பசுக்களின் ப்ருஷ்ட பகுதியிலும் (பின்பகுதி) இலட்சுமி இருக்கிறாள். எனவே, பசுக்களின் பின்புறத்தில் மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு ஜிக்கின்றனர். கோலட்சுமி என்று பசுக்களை அழைக்கின்றனர். கிரகப்பிரவேசம் நடத்தும் போது, பசுக்களை வீட்டிற்குள் அழைத்துச் செல்வதன் மூலம், இலட்சுமி தேவி முதலில் செல்கிறாள் என்பது ஐதீகமாக உள்ளது. 

பசுக்கூட்டங்களுக்கு நடுவில் திருமகள் வீற்றிருக்கிறாள் என்று சிற்றிலக்கியத்தில் ஒன்றான சதக நூல் குறிப்பிடுகிறது. வீட்டில் இலட்சுமி கடாட்சம் பெருக சாணத்தால் மெழுகும் வழக்கம் உருவானது.


அஷ்ட இலட்சுமி: ஆதி லட்சுமி, மாகா இலட்சுமி, தன இலட்சுமி, தானிய இலட்சுமி, சந்தான இலட்சுமி, வீர இலட்சுமி, விஜய இலட்சுமி, கஜ இலட்சுமி, இவர்கள் இலட்சுமியின் அம்சங்கள்.             



 16 விளக்குகள் நெய்யினால் ஏற்றி, மஹாலஷ்மிக்கு அர்ச்சனைக்கு வில்வம் இலை,இல்லையெனில் தாமரை பூ அல்லது வெள்ளி காசு , பூக்கள் குங்குமம், குபேரன் படம் இல்லையென்றால் லஷ்மி படம், அர்ச்சனை செய்ய காசுகளை பயன்படுத்தவும்

நைவேதியம்
சக்கரை பொங்கல், பால் தேன், சிறிது நெய்
இந்த பூஜையை செய்வதால் பதினாறு பேறுகளும் நிறைவாகப் பெற்று பெருவாழ்வு வாழ்வர்

16 ல‌ஷ்மி

செளந்தர்ய லஷ்மி

செளபாக்கிய லஷ்மி

கீர்த்தி லஷ்மி

வீர லஷ்மி

விஜய லஷ்மி

சந்தான லஷ்மி

மேத லஷ்மி

வித்யா லஷ்மி

துஷ்டி லஷ்மி

புஷ்டி லஷ்மி

ஞான‌ லஷ்மி

சக்தி லஷ்மி

சாந்தி லஷ்மி

சாம்ரஜ்ய லஷ்மி

ஆரோக்கிய லஷ்மி

ஆதி மஹா லஷ்மி


மஹ‌ல‌ஷ்மி தியான‌ம்:

யா ஸ்ரீ ஸ்வ‌ய‌ம் ஆவிர்ப‌பூவ‌ ஜ‌க‌த்ஹிதாய‌ ப்ர‌ச‌ன்ன‌வ‌த‌ன‌ம்

ஷோடஷ் பலப்ரதாம் ப‌க‌வ‌தீம் வ‌ந்தே அர‌விந்தாஷ்திதாம்

யா ஸ்ரீக் ஷ‌தாஸ்த‌ விராஜ‌மானா சா வ‌ர‌ம் த‌தாதி ச‌ம்பூஜ‌கானாம்

த‌ஸ்யை ஸ்ரீயை ந‌மோஸ்த்து ச‌த‌த‌ம் ந‌மாமி தாம் ஆதிலஷ்மீம் சுப‌ம்

ஸ்ரீ தனாஹர்ஷன ஸ்ரீ குபேர‌ சகித‌ ஸ்ரீ ம‌ஹால‌ஷ்மீம் தயாயாமி

அர்ச்ச‌னை:

ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை ந‌ம‌க

ஓம் ஸ்ரீம் செள‌ந்த‌ர்ய‌ல‌ஷ்மீ ச‌ம்ப‌ன்னாயை ந‌ம‌ஹ‌

ஓம் ஸ்ரீம் செள‌பாக்கிய‌ல‌ஷ்மீ ப‌ரிவ்ருதாயை ந‌ம‌ஹ‌

ஓம் ஸ்ரீம் கீர்த்தில‌ஷ்மீ சேவித்தாயை ந‌ம‌ஹ‌

ஓம் ஸ்ரீம் வீரலஷ்மீ ஆஸ்ரீதாயை ந‌ம‌ஹ‌

ஓம் ஸ்ரீம் விஜ‌ய‌ல‌ஷ்மீ வ‌ந்திதாயை ந‌ம‌ஹ‌

ஓம் ஸ்ரீம் ச‌ந்தான‌ல‌ஷ்மீ ஸ்துதாயை ந‌ம‌ஹ‌

ஓம் ஸ்ரீம் மேதால‌ஷ்மீ மேதிதாயை ந‌ம‌ஹ‌

ஓம் ஸ்ரீம் வித்யால‌ஷ்மிய‌ விராஜ‌மானாயை ந‌ம‌ஹ‌

ஓம் ஸ்ரீம் துஷ்டில‌ஷ்மீ ச‌ந்துஷ்டாயை ந‌ம‌ஹ‌

ஓம் ஸ்ரீம் புஷ்டில‌ஷ்மியா ப்ர‌ச‌ன்னாயை ந‌ம‌ஹ‌

ஓம் ஸ்ரீம் ஞான‌ல‌ஷ்மீ யுக்தாயை ந‌ம‌ஹ

ஓம் ஸ்ரீம் ச‌க்தில‌ஷ்மீ சமேதாயை நமஹ‌

ஓம் ஸ்ரீ சாந்திலஷ்மீயா ப்ரசன்ன வதனாயை நமஹ‌

ஓம் ஸ்ரீ சாம்ராஜ்யலஷ்மியா அலங்க்ருதாயை நமஹ‌


ஓம் ஸ்ரீ ஆரோக்கிய‌ல‌ஷ்மீயா ந‌ம‌ஸ்கிருத்தாயை ந‌ம‌ஹ‌

ஓம் ஸ்ரீம் ஆதில‌ஷ்மீ இதி விராஜமானாயை நமஹ‌

லஷ்மீ அஷ்டோத்திரம்:

ஓம் அன்ன லக்ஷ்மியை நம:
ஓம் ஆதி லக்ஷ்மியை நம:
ஓம் இஷ்ட லக்ஷ்மியை நம:
ஓம் ஈச்வர லக்ஷ்மியை நம:
ஓம் உத்தம லக்ஷ்மியை நம:
ஓம் ஊர்த்வ லக்ஷ்மியை நம:
ஓம் ஏகாந்த லக்ஷ்மியை நம:
ஓம் ஐச்வர்ய லக்ஷ்மியை நம:
ஓம் ஓங்கார லக்ஷ்மியை நம:
ஓம் ஔஷத லக்ஷ்மியை நம:
ஓம் அகாராதி ஷகாராந்த லக்ஷ்மியை நம:
ஓம் அம்ச லக்ஷ்மியை நம:
ஓம் அமிர்த லக்ஷ்மியை நம:
ஓம் அஷ்ட லக்ஷ்மியை நம:
ஓம் அக்ஷர லக்ஷ்மியை நம:
ஓம் அச்வ லக்ஷ்மியை நம:
ஓம் தன லக்ஷ்மியை நம:
ஓம் தான்ய லக்ஷ்மியை நம:
ஓம் விஜய லக்ஷ்மியை நம:
ஓம் வீர்ய லக்ஷ்மியை நம:
ஓம் வித்யா லக்ஷ்மியை நம:
ஓம் ஸந்தான லக்ஷ்மியை நம:
ஓம் ஸௌபாக்ய லக்ஷ்மியை நம:
ஓம் ஸப்த லக்ஷ்மியை நம:
ஓம் ஸ்பர்சலக்ஷ்மியை நம:
ஓம் ரூப லக்ஷ்மியை நம:
ஓம் ரஸ லக்ஷ்மியை நம:
ஓம் கந்தலக்ஷ்மியை நம:
ஓம் கஜ லக்ஷ்மியை நம:
ஓம் காந்த லக்ஷ்மியை நம:
ஓம் க்ருஹ லக்ஷ்மியை நம:
ஓம் குண லக்ஷ்மியை நம:
ஓம் கம்பீர லக்ஷ்மியை நம:
ஓம் கேந்த்ர லக்ஷ்மியை நம:
ஓம் கைவல்ய லக்ஷ்மியை நம:
ஓம் ரத்ன லக்ஷ்மியை நம:
ஓம் ஸ்வர்ண லக்ஷ்மியை நம:
ஓம் முத்து லக்ஷ்மியை நம:
ஓம் பவழ லக்ஷ்மியை நம:
ஓம் வைர லக்ஷ்மியை நம:
ஓம் வைடூர்ய லக்ஷ்மியை நம:
ஓம் மரகத லக்ஷ்மியை நம:
ஓம் கோமேதக லக்ஷ்மியை நம:
ஓம் புஷ்பராக லக்ஷ்மியை நம:
ஓம் குபேர லக்ஷ்மியை நம:
ஓம் நளின லக்ஷ்மியை நம:
ஓம் நாக லக்ஷ்மியை நம:
ஓம் நித்ய லக்ஷ்மியை நம:
ஓம் நேச லக்ஷ்மியை நம:
ஓம் ஜீவ லக்ஷ்மியை நம:
ஓம் ஜெய லக்ஷ்மியை நம:
ஓம் ஜோதி லக்ஷ்மியை நம:
ஓம் த்ரிபுர லக்ஷ்மியை நம:
ஓம் துரித லக்ஷ்மியை நம:
ஓம் தேவ லக்ஷ்மியை நம:
ஓம் தைர்ய லக்ஷ்மியை நம:
ஓம் யந்த்ர லக்ஷ்மியை நம:
ஓம் மந்த்ர லக்ஷ்மியை நம:
ஓம் தந்த்ர லக்ஷ்மியை நம:
ஓம் யக்ஞ லக்ஷ்மியை நம:
ஓம் தான லக்ஷ்மியை நம:
ஓம் தபோ லக்ஷ்மியை நம:
ஓம் ஸித்த லக்ஷ்மியை நம:
ஓம் க்ரியா லக்ஷ்மியை நம:
ஓம் ஞான லக்ஷ்மியை நம:
ஓம் மோக்ஷ லக்ஷ்மியை நம:
ஓம் சாந்த லக்ஷ்மியை நம:
ஓம் சீதா லக்ஷ்மியை நம:
ஓம் சுப லக்ஷ்மியை நம:
ஓம் ஸுந்தர லக்ஷ்மியை நம:
ஓம் வர லக்ஷ்மியை நம:
ஓம் வீர லக்ஷ்மியை நம:
ஓம் விவேக லக்ஷ்மியை நம:
ஓம் விஷ்ணு லக்ஷ்மியை நம:
ஓம் வேத லக்ஷ்மியை நம:
ஓம் வைகுண்ட லக்ஷ்மியை நம:
ஓம் ஸத்ய லக்ஷ்மியை நம:
ஓம் ஸங்கல்ப லக்ஷ்மியை நம:
ஓம் பாக்ய லக்ஷ்மியை நம:
ஓம் புண்ய லக்ஷ்மியை நம:
ஓம் ப்ரகாச லக்ஷ்மியை நம:
ஓம் பீதாம்பர லக்ஷ்மியை நம:
ஓம் மோன லக்ஷ்மியை நம:
ஓம் மோஹன லக்ஷ்மியை நம:
ஓம் திவ்ய லக்ஷ்மியை நம:
ஓம் தீப லக்ஷ்மியை நம:
ஓம் பூத லக்ஷ்மியை நம:
ஓம் புவன லக்ஷ்மியை நம:
ஓம் த்ரைலோக்ய லக்ஷ்மியை நம:
ஓம் மங்கள லக்ஷ்மியை நம:
ஓம் மாதவ லக்ஷ்மியை நம:
ஓம் மாங்கல்ய லக்ஷ்மியை நம:
ஓம் மிதுன லக்ஷ்மியை நம:
ஓம் மீன லக்ஷ்மியை நம:
ஓம் மஹா லக்ஷ்மியை நம:
ஓம் அரூப லக்ஷ்மியை நம:
ஓம் விரூப லக்ஷ்மியை நம:
ஓம் கமல லக்ஷ்மியை நம:
ஓம் ஸர்வபாப ப்ரசமன லக்ஷ்மியை நம:
ஓம் ஸர்வ வ்யாதி நிவாரண லக்ஷ்மியை நம:
ஓம் துஷ்ட ம்ருத்யு ப்ரசமன லக்ஷ்மியை நம:
ஓம் துஷ்ட தாரித்ரிய நாசன லக்ஷ்மியை நம:
ஓம் க்ருஹ பீடா ப்ரசமன லக்ஷ்மியை நம:
ஓம் புத்ர பௌத்ராதி ஜனக லக்ஷ்மியை நம:
ஓம் விவாஹ ப்ரதமிஷ்டத லக்ஷ்மியை நம:
ஓம் அரிஷ்ட ப்ரவிபஞ்சன லக்ஷ்மியை நம:
ஓம் முக்தி பலப்ரத லக்ஷ்மியை நம:
ஓம் தனதான்ய மஹாராஜ்ய ஸர்வ ஸௌபாக்ய தாயக லக்ஷ்மியை நம:

நீராஞ்ஜனம்:


நீராஜனம் சுமாங்கல்யம் கற்பூரனே சமன்விதம்

சந்திரார்க வஹ்னி சதர்ஷம் க்ரஹான ஹரிவல்லபயே

ச‌ர்வ‌ துக்கூப ஷாந்த்யார்த‌ம் ச‌ர்வ‌ ம‌ங்க‌ல‌ அவாப்ய‌ர்த‌ம்

ஆவாஹிதாப்யோ ச‌ர்வ‌தாப்யோ தேவ‌தாப்யோ

க‌ற்பூர‌ நீர‌ஞ்ஜ‌னாம் சந்த‌ர்ஷயாமி

பிராத்த‌னை:

யா ஹி வைஸ்ர‌வாணே ல‌ஷ்மீ யா சென்றாயே ஹ‌ரிவாஹ‌னே

சா ராவ‌ன‌க்ருஹே ச‌ர்வா நித்ய‌ம‌யேவான‌பாயினே

யா ச‌ ராஜ‌க் குபேர‌ஸ்ய‌ ய‌மஷ்ய‌ வ‌ருன‌ஸ்ய‌ ச‌

தாத்துர்ஷி த‌த்விஷ்டா வா ர‌ஹுத்தே ரக்ஷோக்ருஹோஷ்விஹா

ச்வர்கோய‌ம் தேவ‌லோகோயம் இந்திர‌ஸ்ய‌யேம் பூரி பாவேத்

சித்திர்வேய‌ம் பராஹி ஸ்யான்தித்யாம‌ன்யதா மாருதி

குபேர‌ தியான‌ம்:

ம‌நுஜ‌ வாக்ய‌ விமான‌ வ‌ர‌ஸ்தித‌ம்

க‌ருட‌ர‌த்ன‌ நிப‌ம் நிதிதாய‌க‌ம்

ஷிவ‌ஷ‌க‌ம் முகுடாதி விபூஹ‌ம்

வ‌ர‌க‌த‌ம் த‌ந‌த‌ம் ப‌ஜ‌ துந்தில‌ம்

ஷங்க‌ ப‌த்மாதி நித‌யே குபேராயா ந‌மோ ந‌ம‌ஹ‌

த‌ன‌தான்ய‌ ச‌ம்ரித்த‌ஸ்து த்வ‌த் ப்ராசாதாத் ம‌யி ஸ்திர‌

ந‌வ‌நிதி ச‌மோபேத‌ம் த‌ந‌த‌ம் யான‌ புஷ்ப‌க‌ம்

பிங்காஷ‌ம் ப‌வ‌யே நித்ய‌ம் ஹேம‌வ‌ர்ண‌ மனோகரம்

ஸ்ரீ த‌னாக‌ர்ஷ‌ண ஸ்ரீ ம‌ஹ‌ல‌ஷ்மீ ச‌ஹித‌ம் ஸ்ரீ குபேர‌ ராஜ‌ம் த்யாயாமி

அர்ச்ச‌னை:

ஸ்ரீ குபேராயா நமஹ
ஸ்ரீ தநதாய நமஹ‌
ஸ்ரீ ய‌க்ஷேஷாய‌ ந‌மஹ‌
ஸ்ரீ நிதீஷாய‌ ந‌மஹ‌
ஸ்ரீ ம‌ஹால‌ஷ்மி நிவாச‌புவே ந‌மஹ‌
ஸ்ரீ ம‌ஹ‌தே ந‌மஹ‌
ஸ்ரீ வ‌ர‌நிதிய‌திபாய‌ ந‌மஹ‌
ஸ்ரீ ல‌ஷ்மி சாம்ராஜ்ய‌தாய‌ காய‌ ந‌மஹ‌
ஸ்ரீ வைஸ்ர‌வ‌ணாயை ந‌மஹ‌
ஸ்ரீ ராவ‌ணாக்ரஜாய‌ ந‌மஹ‌
ஸ்ரீ அஷ்ட‌ல‌ஷ்மியா ஸ்ரீதால‌யாய‌ ந‌மஹ‌
ஸ்ரீ சுஹாஸ்ராயாய‌ ந‌மஹ‌
ஸ்ரீ ச‌ர்வாநீக‌ருணாபாத்ராய‌ ந‌மஹ‌
ஸ்ரீ சித்ர‌லேகாம‌ன‌ப்ரியாய‌ ந‌மஹ‌
ஸ்ரீ சிவ‌பூஜார‌தாய‌ ந‌மஹ‌
 
நிர‌ஞ்ச‌ன‌ம்:

ராஜாதி ராஜாய‌ ப்ர‌ஸ்ய‌ சாஹிணே
ந‌மோ வ‌ய‌ம்வைஸ்ர‌வ‌ணாய‌ குர்மஹே
ச‌ மே காமா காமாய‌ ம‌ஹ்யம்
க‌மேஸ்வ‌ரோ வைஸ்ர‌வ‌ணோ த‌தாது
குபேராய‌ வைஸ்ர‌வ‌ணாய‌ ம‌ஹாராஜாய‌ ந‌மஹ‌

ப்ராத்த‌னா:

வித்தேஷாய‌ குபேராய‌ ராஜ‌ராஜாய‌ ய‌க்ஷஷே
த‌நாத்ய‌க்ஷாய‌ ஸ்ரீதாய‌ ஏக‌பிங்காயாதே ந‌மஹ‌
ஓம் ய‌க்ஷாய‌ குபேராய‌ வைஸ்ர‌வ‌ணாயா
த‌ந‌தான்யாதி ப‌த‌யே ந‌மஹ‌
த‌ந‌தான்ய‌ ச‌ம்ருத்திம்மே தேஹிதா ப‌ய‌ ஸ்வாஹ‌

ஷேம‌ ப்ராத்த‍‌னா:‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

ம‌ந்திர‌ஹீன‌ம் க்ர‌யாஹீன‌ம் ப‌க்திஹீன‌ம் ம‌ஹேஸ்வர‌
ய‌த்பூஜித‌ம் ம‌யா தேவ‌ ப‌ரிபூர்ண‌ம் த‌தஸ்து தே


ச‌ம‌ர்ப‌ண‌ம்:
வ‌ல‌து கையில் ஒர் ஸ்பூன் த‌ண்ணீர் எடுத்து க‌ல‌ச‌த்தின் முன்னால் விட‌வும்

காயேன‌ வாச்ச‌ ம‌ன‌சேந்திரியை வா புத்யாத்ம‌நா வா ப்ர‌க்ருதேஸ்வ‌பாவாத்
க‌ரோமி ய‌த்ய‌த்ச‌க‌ல‌ம் ப‌ர‌ஸ்மை நாராயணாயேதி ச‌ம‌ர்ப‌ண‌ம்!








Monday 12 March 2012

நலமே நல்கும் நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர்




namakkal-anjaneyar-gold.jpg

namakkal-anjaneyar-new.jpg


ஸ்ரீ ஹநுமான் காயத்ரி
ஓம் அஞ்சனி சுதாயா வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தன்னோ ஹநுமன் ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே வாயுபுத்ராய தீமஹி
தந்தோ மாருதி ப்ரசோதயாத்!
namakkal-anjaneyar-sandal.jpg
காரிய சித்தி மந்திரம்
ஸ்ரீ ராம தூத மஹா தீர
ருத்ர வீர்ய சமத்பவ
அஞ்சனா கற்ப சம்பூத
வாயு புத்ரா நமஸ்துதே
ஸ்ரீ நாமகிரி லக்ஷ்மி ஸகாயம்
ஸ்ரீ நரசிம்ம பரப்பரம்மணே நம
ஸ்ரீ ஆஞ்சநேய மகாகுருவே நம

http://static.panoramio.com/photos/original/6581329.jpg


நாமகிரி
நா         -       பாவங்களை நசிக்க செய்வது
ம          -       மங்களத்தை கொடுப்பது
கி          -       வாக்கு வன்மையை அளிக்கவல்லது
ரி          -       பிற்காலத்தில் வீடளிக்கும் சக்தி வாய்ந்தது

இந்த நான்கு பெருமை கொண்ட எழுத்துச் சேர்க்கையால் ஆனது தமிழில் நாமக்கல் என்று வழங்கப்படுகிறது.


ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு சௌடுகர் மகரிஷிகள் சூத முனிவரை ஸ்ரீ சைலஷேத்திரத்தின் பெருமையை அறிய அணுகினார். அப்போது ஸ்ரீ விஷ்ணுவின் தசாவதாரத்திலிருந்து நரசிம்மர் பற்றிய புராணத்தைக் கூறியதாக வடமொழியான ஸமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளின் அடிப்படையில் இந்த வரலாறு அளிக்கப்படுகிறது.


தேவ சபையில் சகல சுத்த குணம் பொருந்தியவர் மகாவிஷ்ணுவே என்ற கருத்து இருந்தது. அதனையொட்டி துர்வாச முனிவரிடம் வணங்கி தேவேந்திரன் விளக்கம் கேட்டார். துர்வாச முனிவர் ராஜகோளத்தில் பிரம்மாவும், மஹாலட்சுமியும் தாமஸ உலகில் ஈஸ்வரனும், சரஸ்வதியும் சத்வகுண உலகில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவும், பரமேஸ்வரியும் தோன்றியதாக கூறினார். 


 சரஸ்வதியை நான்முகனும், ஈஸ்வரியை ஈஸ்வரனும், லட்சுமியை மஹாவிஷ்ணுவும் மணந்ததாகக் கூறினார். சகலவிதமான பொறுமையுடன் இராஜஸ கோளத்தில் பிறந்த மஹாலட்சுமியை வகித்து உலகத்தைக் காப்பாற்றி வருவதால் மஹாவிஷ்ணுவே சிறந்தவராவார் எனக் கூறினார் துர்வாச முனிவர். 


இதைக் கேட்ட இந்திரன் இதனைப் பரீட்சை மூலம் அறிய நினைக்கிறேன் என்றார். பகவானை மனதில் தியானித்து துர்வாசர் சத்யலோகம் சென்றார். அங்கு மஹாவிஷ்ணு நித்திரையில் இருந்தார்.

துர்வாச முனிவரின் வேகத்தைக் கண்ட துவார பாலகர்கள் அவரைத் தடுக்கவில்லை. தான் வந்தும் மஹாவிஷ்ணு நித்திரையில் இருப்பதைக் கண்டவுடன் மஹவிஷ்ணுவின் மார்பில் எட்டி உதைத்தார்.
மஹாவிஷ்ணு கோபம் கொள்ளாமல் சாந்தமுகத்துடன் முனிவரை பார்த்து தாங்கள் உதைத்ததால் மார்புப் பகுதி புனிதம் அடைந்ததாகவும் தங்கள் பாதம் வலிக்குமே எனக் கூறி முனிவரின் பாதத்தை வருடினார். உடனே துர்வாசர் தெளிவடைந்து மஹாவிஷ்ணுவிடம் பிழை பொருத்தருளுமாறு கேட்டார்.
இட்ட பணியை செய்யத் தவறிய துவார பாலகர்களை மூன்று பிறவிகள் எடுத்து (தமக்கு விரோதிகளாக) இருப்பிடம் அடைவீர்! என தண்டனை கொடுத்தார். 
பகவானை பிரிய மனமற்ற துவாரபாலகர்கள் கட்டளையின்படி மூன்று பிறவிகள் விரோதிகளாகப் பிறக்கிறோம். ஆனால் தங்களாலேயே மரணம் அடைய வேண்டும் என வேண்ட, இறைவனும் அவ்வாறே வரம் தந்தார்.
அவர்கள் அரக்கன் மதுகைடகர்போல் துவார பாலகர் இருவரும் இரண்யகசிபு மற்றும் இரண்யாட்சன் ஆகப்பிரிந்து இரண்யாக்ஷன் பூமியை அபகரித்து பாதாளத்தில் ஒளிந்துகொள்ள மஹாவிஷ்ணு யக்ஞவராக அவதாரம் எடுத்து வதம் செய்து பூமிதேவியைக் காப்பாற்றினார். 
இரண்யகசிபு கடும் தவத்தை மேற்கொண்டு பரமசிவனிடமிருந்து 50 கோடி ஆட்களையும் தேவர், மானுடர், ஜலம், அக்னி, விஷம், ஆயுதங்கள் இவைகளாலும் பூமி, ஆகாயம், பகல், இரவு வேளைகளில் சாகா வரம் பெற்றார்.
பரமேஸ்வரனின் வரத்தால் மூவுலகையும், முனிவர்களையும், தேவர்களையும், மனிதர்களையும் ஆண்ட இரணியன் ஆட்சியில் எவ்வித யாகமும், பஜனைகளும் நடைபெறவில்லை. இதனைக் கண்ட தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட அவர் சக்கரத்தாழ்வாரை பிரகலாதனாக, இரணியன் மகனாகப் பிறக்க கட்டளையிட்டார்.
கருவிலேயே நாரதரால் அனைத்தும் கற்ற பிரகலாதனைத் தக்க வயதில் குருகுலத்திற்கு இரணியன் அனுப்பினான். இரணியன் கட்டளைப்படி ‘இரணியாய நமக’ என ஆசிரியர் முதலடி போதிக்க அவன்
 ‘ஓம் நமோ நாராயணாய நமக’ எனக் கூறினான்.
 பலவகைகளிலும் தண்டித்து முயற்சித்து பார்த்தான் இரணியன். கொடுமையான தண்டனைகள், கொலை முயற்சிகள் கூட பிரகலாதனை புஷ்பங்களாக மாறி தர்மம் மற்றும் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் ஆசிர்வாதம் ஆகியன காத்தன. 
இதனைக்கண்ட இரணியன் பிரகலாதனிடம்,  நாராயணனை எனக்கு காட்டு’ எனக்கூற பிரகலாதன் எங்கும் நிறைந்திருக்கிறான் எனக் கூறினான். அப்பொழுது அங்குள்ள தூணை இரணியன் அடிக்க அங்கிருந்த நரசிம்மமூர்த்தி காட்சியளித்தார்.
அவன் பெற்ற வரங்கள் மாறுபடாமல் இரணியனைத் தன் சிங்கநகம் போன்ற கூரிய நகத்தால் அவனை அழித்தார். அப்படியும் கோபம் அடங்காத ஸ்ரீ நரசிம்ம அவதார மூர்த்தியான ஸ்ரீமத் நாராயணனை சாந்தப்படுத்த மகாலட்சுமியை தேவர்கள் வேண்ட அவளும் அருகில் செல்ல பயந்தாள். பிரகலாதன் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியை சாந்தமடையச் செய்ய, ஸ்ரீ நரசிம்மர் ராஜ்ய பட்டாபிஷேகம் செய்து அருள்பாளித்தார். அவனும் அதுமுதல் பூஜித்து வரலானான்.
அதுமுதல் மகாலட்சுமி பெருமாளைப் பிரிந்து ஒரு நீர் நிலையருகே பர்ணசாலை அமைத்து பகவானை நோக்கி கடும் தவமியற்றினாள். 
திரேதா யுகத்தில் இராமவதாரத்தில் இராவணனால் வானர சேனைகளும், இராமரும் மூர்ச்சையடைந்தனர். அப்பொழுது சாம்பவானால் அறிவுறுத்தப்பட்டு ஸ்ரீ ஆஞ்சநேயர் இமயமலையை வாயுபகவானின் உதவியுடன் தாண்டி சிரஞ்சீவி மலையை பெயர்த்துவந்து சஞ்சீவி மூலிகைகளால் எழுப்பிவிட்டு பழையபடி சஞ்சீவி மலையை வைத்துவிட்டுத் திரும்பினார். 
அப்போது நேபாளத்தில் கண்டகி நதியில் ஓர் சாளக்கிராம மலையைப் பார்த்தார். அதில் ஸ்ரீ நரசிம்மர் ஆவிர் பவித்திருப்பதைக் கண்ட அனுமான் சாலிக்கிராம மலையை வழிபாட்டிற்காகப் பெயர்த்தெடுத்து ஆகாய மார்க்கமாக இலங்கை நோக்கி பயணித்தார். 
சூர்யோதயக் காலம் நெருங்குவதைக் கண்ட அனுமான் அனுஷ்டானம் செய்யத் தீர்மானித்து மஹாலட்சுமி தவம் செய்யும் நீர்நிலைகளடங்கிய அந்த இடத்தில் வைத்துவிட்டு அனுஷ்டானம் செய்தார். திரும்பி வந்து எடுக்க முயன்ற அனுமன் அதை அசைக்கக்கூட முடியவில்லை.
அப்பொழுது ஸ்ரீ நரசிம்மமூர்த்தி ஆஞ்சநேயருக்கு அருள்பாலித்து ராமர் கைங்கரியத்தை முடித்து ராமாவதாரத்திற்குப் பின்பு திரேதாயுகத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயரும், கார்கோடகனும் ஆவிர் பவித்து ஸ்ரீ நரசிம்மர் தூணிலும் சாலிக்கிராமத்திலும் இருந்து ஸ்ரீ மஹாலட்சுமியின் தவத்திற்காக சாளக்கிராமகிரி ரூபத்தில் இங்கு எடுத்துவந்து ஸ்தாபிக்கப்பட்டார்.
க்ஷராப்தி நாதர் திருக்கோலத்தில் சேவை சாதிப்பதினாலும் உதரத்திலும் சட்சிப்பதாலும் இந்த நாமக்கல் நகரம் ஸ்ரீ சைலசேத்திரம் என்றும் ஸ்ரீ சைலகிரி என்றும் கார்கோடகன் நற்கதியடைந்ததால் நாகவனம் என்றும் நாமகிரி என்றும் கூறப்படுகிறது.

ஸ்ரீ நரசிம்மர் ஆகிய மஹாவிஷ்ணு முன்னதாக ஸ்ரீமஹாலட்சுமி நரசிம்ம மூல மந்திரத்தை நினைத்து தவமிருக்க அகமகிழ்ந்து காவேரிக்கும் மஹாலட்சுமிக்கும் அருள்பாவிக்க கமலாலயத்தில் 
குளித்து மனம் முழுக்க பக்தியுடன் வழிபடுபவர்களுக்கு ஏவல், பில்லி, சூன்யம் போன்றவற்றில் இருந்து விடுபடவும், சகல நன்மைகளும் பெறுவர் எனவும் வரமருளியதாகப் புராணம் கூறுகிறது.
காசியப முனிவரின் மனைவிகளான கருடன் முதலிய பக்ஷீகளின் தாயான விநதை மற்றும் பாம்புகளின் தாயான கத்ரு ஆகிய இருவரும் ஒருவரையொருவர் அடிமைகொள்ள நினைத்தனர். 
பாற்கல் கடைந்தெடுக்கப்பட்டபோது உருவான உச்சை சிரஸஸ் என்ற குதிரை வெண்ணிறமுடையது என விநதை ஒருமுறை சொன்னதும் கத்ரு தன் பிள்ளைகளான நாகங்களை குதிரையின் வால் பகுதியில் சுற்றச் செய்து கருப்பு என நிரூபித்து விநதையை அடிமையாக்கினாள். 
பிறகு கருடன் அம்ருத கலசத்தைக் கொண்டு தன் தாயான விநதையை அடிமைத்தலையிலிருந்து நீக்க தக்ரு அரசனொருவன் நடத்திய யாகத்தில் பாம்புகள் மடிய சபித்தாள். 
கார்கோடகன் ஒருவாறு அதை நிவர்த்தி செய்து கொண்டு தந்தையான காசியப முனிவரிடம் குறும்பு செய்ய காட்டுத்தீயில் சிக்கி அவதிப்பட சபித்த அவர், கார்கோடகனின் வேண்டுதலால் நளச்சக்கரவர்த்தியால் விடுதலை பெற்று நாராயணனை அடைவாய் என சாபவிமோசனம் அளித்தார். 
நளச்சக்ரவர்த்தியால் காப்பாற்றப்பட்ட கார்கோடகன் நாராயணனை நோக்கி தவமிருக்க நாராயணன் தோன்றினார். அப்பொழுது கார்கோடகன் ஆதிசேஷன் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பது போல் அடியேன் மீது பள்ளி கொண்டு அருள்பாலிக்க வேண்டும் என வேண்ட ஸ்ரீரங்கநாதன் என்ற பெயரில் மலையின் பின்புறம் சேஷசாயி ஆன நாராயணன் கார்கோடகசாயியாக காட்சியளிக்கப்பட்டதாகப் புராணம் கூறுகிறது. 
 கார்கோடகன் தினமும் கமலாலய குளத்திலிருந்து நீர் எடுத்து வந்து நித்துயராதானம் செய்யுமாறு கட்டளையிட்டார். (இன்றும் அந்த கார்கோடகனின் வடு நாமக்கல் மலையில் உள்ளது.)


நாமக்கல் கமலாலயம் என்ற புண்ய தீர்த்தத்திற்கு அடுத்தபடியாக நரசிம்மருக்கு தெற்கே ஓர் நீர்நிலையை தேவர்கள் ஏற்படுத்தி ஸ்ரீ நாமகிரி லக்ஷ்மி நரசிம்மன், ஸ்ரீ ரெங்கநாயகி ரெங்கநாதர், ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆகியோரை அர்ச்சித்து சென்றதால் அது தேவதீர்த்தம் எனவும் வடக்கே ஒரு நீர்நிலையை பிரம்மனோத்தமர் என்பவர் உருவாக்கியதால் சக்ரதீர்த்தம் எனவும் அழைக்கப்படுகிறது. 
சக்ரதீர்த்தம் என அழைக்கப்பட காரணம் பிரம்மனோத்தமரை ஒரு ராட்சகன் கொல்ல முயல பகவான் தன் சக்கரத்தால் அவனை அழித்து பிராமனந்தரைக் காப்பாற்றியதால் அவ்விடம் அவ்வாறு அழைக்கப்படுகிறது.

ஸ்ரீபதி என்னும் அந்தணர் கொல்லி மலைக்குகையில் ஆண்டவனை நோக்கி தவம் செய்யத் தோன்றிய பகவான் ஸ்ரீ வரதராஜ பெருமாளாக அவர் வேண்டுகோளுக்காக மலை உச்சியில் காட்சி தருகிறார். இங்கு வைகானஸ முறைப்படி பூஜைகள் நடைபெறுகின்றன.
தனி சிறப்புக்கள்
நாமக்கல்லில் சுமார் 18 அடி உயரமுள்ள சக்திவாய்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் திறந்த வெளியில் நின்று தொழுத கைகளுடன் நிற்கும் திருக்கோவில் இருக்கிறது. 


இந்நகருக்கு சுமார் 10 மைல் தொலைவில் அநேக மூலிகைகளும், பல மரங்களும், தானிய வகைகளும் கொண்ட ‘சதுரகிரி’ என்னும் பெருமை வாய்ந்த ‘கொல்லிமலை’ இருக்கிறது.


 நாமக்கல் நகரில் மிகவும் சக்திவாய்ந்த பிரசித்திபெற்ற 
ஸ்ரீ நாமகிரியம்மன் கோவில் கொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கிறாள்.


 ஸ்ரீ நாமகிரியம்மன் திருக்குளத்தில் அவதரித்து ஸ்ரீ நரசிம்மமூர்த்தியை குறித்து தவமியற்றி அருள் பெற்றதால் இக்குளம் கமலாலயம் என்னும் சிறப்பு பெற்றது. 
நாமக்கல் நகரம் புராணரீதியாய் தீர்த்தம், தலம், மூர்த்தி ஆகிய முப்பெருமையையும் உடையதால் மிகச் சிறப்புப் பெற்றது.
நாமகிரி என்ற நான்கு எழுத்துக்களும் மிகவும் புனிதமானது.
ஸ்ரீ நாமகிரியம்மன் மகிமையறிந்த இமயம் முதல் குமரி வரை உள்ள பக்தர்கள் வடதேசத்திலும் கூட நாமக்கல் என்று சொன்னால் வரப்பிரசாதியான ஸ்ரீ நாமகிரியம்மனும் மிக உயரமான ஸ்ரீ ஆஞ்சநேயர் இருக்கும் ஊர்தானே என்று வினவுகிறார்கள். 
கர்னாடக இசை வல்லுநர்கள் நாமக்கல் என்றதும் ‘பல்லவி நரசிம்ம அய்யங்கார்’ ஊர்தானே என்று விசாரிப்பார்கள். 
கன்னட தேசத்தவர்கள் ஸ்ரீ நாமகிரி தாயார் மீது அபார பக்தி கொண்டு பாடல் பாடிய ‘நரஹரி ஆச்சார்’ தோன்றிய ஊரா என்று பெருமைப்படுத்துவார்கள். 
தேசபக்தர்கள் நாமக்கல் என்றதும் ‘நாமக்கல் கவிஞர்’ பிறந்த ஊர்தானே என்றும் கணிதத்தில் பிரியமுள்ளவர்கள் கணிதமேதை ராமானுஜத்திற்கு கனவில் தோன்றி கடினமான கணிதத்தை புலப்படுத்திய நாமகிரியம்மன் எழுந்தருளியிருக்கும் ஊர் என்றும் பெருமையாக பேசுவார்கள்.



























 அவரவர் பக்தி சிரத்தைக்கு தகுந்தபடி ஸ்ரீ நாமகிரியம்மன் அருள் பாலிக்கிறாள்.


ஸ்ரீ நாமகிரியம்மன் கமலாலய புஷ்கரணியில் தோன்றி ஸ்ரீ நரசிம்மஸ்வாமியை குறித்து கடுமமையான தவம் இயற்றி ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியை மகிழ்வித்து அனேக விஷேசமான சக்திகளை பகவானிடமிருந்து பெற்றிருக்கிறாள். 

ஆதலால் இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் தாமரையில் அமர்ந்திருப்பவளும் பக்தர்களுக்கு வேண்டும் வரமும் அபயமும் அளிப்பவளும் ஆன 
ஸ்ரீ நாமகிரி அம்மனை முதலில் தரிசித்து சுவாமியை வழிபடுகிறார்கள். பக்தர்கள் புடவை, ஆபரணங்கள், குழந்தைகளுக்கு முடி எடுத்தல் முதலிய காணிக்கைகளை செலுத்தி அபிஷேக ஆராதனைகளால் ஸ்ரீ நாமகிரியம்மனை வழிபடுகிறார்கள்.
இமயம் முதல் குமரி வரை ஸ்ரீ நாமகிரியம்மனுக்கு அடியார்கள் இருக்கிறார்கள். ஸ்ரீ நாமகிரியம்மன் எனும் திருப்பெயராலேயே இந்நகர் நாமக்கல் என்று வழங்குகிறது. அடியார்கள் தம் குழந்தைகளுக்கு நரசிம்மன், நாமகிரி என்று பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். 

ஸ்ரீ நாமகிரியம்மன் திருநட்சத்திரமான பங்குனி உத்திரத்தில், ஸ்ரீ நரசிம்ம சுவாமி அம்மன் சந்நிதிக்கு எழுந்தருளி, அபிஷேக ஆராதனைகள் கண்டருளி திருக்கல்யாண திருக்கோலத்துடன் சேவை சாதிக்கிறார்கள். 

ஸ்ரீ நாமகிரியம்மன் திருமுக மண்டல சோயை (சாந்தி) பார்க்கப் பார்க்க திகட்டாத சிறப்பு வாய்ந்தது. 

நவராத்திரி தினங்களில் விசேஷ அபிஷேக ஆராதனைகள், பலவித ஆபரணங்கள் சமர்ப்பித்து திருவீதி உலா விசேஷமாக நடைபெறுகிறது.

ஸ்ரீ நாமகிரி அன்னை பக்தர்களின் சொப்பணத்தில் வந்து உத்தரவிடுவதாகச் சொல்லி இங்கு வந்து தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றிச் செல்கிறார்கள். 
கங்கையில் 5 நாடகள் தங்கி ஸ்நான ஜபம் செய்வதாலும், யமுனையில் மூன்று தினங்கள் தங்கி ஸ்நான ஜபம் செய்வதாலும் காவேரியில் ஓர் தினம் தங்கி ஸ்நான ஜபம் செய்வதாலும் தங்கள் பாவங்களை மனிதர்கள் போக்கிக் கொள்கிறார்கள். 
அப்படி சக்தி வாய்ந்த கங்கையும் காவேரியும் கூட இத்தலத்திற்கு வந்து கமலாலயம் ஸ்ரீ நரசிம்ம புஷ்கரணி இவைகளில் ஸ்நாநம் செய்து ஸ்ரீ நாமகிரியம்மன் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியை வழிபட்டு தங்கள் பாவங்களை போக்கிக் கொண்டார்கள் என்று புராணம் கூறுகிறது.

ஸ்ரீ மஹாலட்சுமியின் தவத்தின் பெருமையால் ஸ்ரீ நரசிம்மருக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மன் என்றும், அம்மனுக்கு ஸ்ரீ நாமகிரி என்றும், திருநகருக்கு நாமகிரி என்னும் வடமொழிச்சொல் நாமக்கல் என்றும் தமிழிலும் பிரசித்தி பெற்றது .... 
முறைப்படி பூஜா கைங்கர்யம் சுவாமிக்கு முதலிலும் பிறகு அம்மன் முதலிய பரிவாரங்களுக்கும் நடைபெறுகிறது. 
ஆனால் பக்தார்கள் தரிசித்து வழிபடுவது பிரார்த்தனை செலுத்துவது யாவும் ஸ்ரீ நாமகிரியம்மனுக்கே
எல்லா விஷேசங்களும் முதலில் அம்மனுக்குத்தான்.
ஸ்ரீ நாமகிரித் தாயரின் சிறப்பு:
இங்கு அமைந்துள்ள ஸ்ரீ நாமகிரித் தாயார் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஸ்ரீ நரசிம்மரை தரிசித்தவாறு தவம் செய்வது போல் அமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள நரசிம்ம தீர்த்தத்தில் நீராடி தாயாரை பூஜிக்க சகல 
செல்வங்களும் வரும். பில்லி, சூனியம் போன்றவை ஒரு மண்டல 
காலத்திற்குள் விலகும் என்ற நம்பிக்கை உள்ளது.
இத்திருக்கோயிலின் பெயராலேயே திருவரைக்கல் எனப்படும் நாமக்கல் நாமகிரி என முன்பு புராணங்களில் கூறப்படுகிறது.
ஸ்ரீ நரசிம்மர் சிறப்பு:
 ஸ்ரீ நரசிம்ம மஹா மந்திரம் 
ஓம் உக்ரவீரம் மஹா விஷ்ணும் 
ஜ்வலந்தம் ஸர்வதோ முகம் 
ந்ருஷம்ஹம் பீஷணம் பத்ரம் 
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்







திருக்கோயில் மலையின் மேற்குப்புறம் குடவரையில் அமைந்துள்ளது. இங்கு வலது காலை தரையில் ஊன்றியும் இடது காலை மடி மீதும் வைத்து ஸ்ரீ நரசிம்மர் வீற்றிருக்கிறார்

அருகில் பூஜக முனிவர்களான சநக சநந்தர்களும், சூர்ய சந்திரர்களும் கவரி வீச வலதுபுறம் ஈஸ்வரனும், இடதுபுறம் பிரம்மாவும் பகவான் இரணியனை அழித்த உக்கிரம் தீர வழிபடுகிறார்கள். 
namakkal narasimhar
ஸ்ரீ மஹாலட்சுமியின் தவத்தால் மகிழந்ததால் இங்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் என அழைக்கப்படுகிறார். 

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் ஒரே இடத்தில் அருள்பாலிப்பதால் மும்மூர்த்தி ஸ்தலம் என அழைக்கப்படுகிறது. 

இங்கு இரணியனை வதைத்த பின் ரத்தக் கறையுடன் கூரிய நகங்களுடன் பகவான் காட்சி தருகிறார்.
உலகில் சிவன் சில இடங்களில் மட்டுமே தலையில் பிறைச்சந்திரனுடன் காட்சி தருகிறார். அவற்றில் ஒன்று இத்திருத்தலம்.

 
பேட்டை என்னும் வியாபார பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கநாதர் திருக்கோயிலில் பெருமாள் பாம்பை குடையாகவும், பாம்பனையை திருவடி தாங்கியாகவும் கொண்டார். 



சிவன் இடுகாட்டை வாசஸ்தலமாகவும் திருநீற்றை பூசியவாறு காட்சி தருகிறார். விஷத்தை சிவனும், மண்ணை விஷ்ணுவும் உண்டதாக புராணம் கூறும் காட்சி இங்குள்ளது.
நாமக்கல் நகரின் புராண சிறப்புகள்: 
தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தின் தலைநகரான நாமக்கல் என்னும் பெயரில் நாமகிரி வழங்கப்பட்டு வருகிறது. 
நகரின் மத்தியில் ஸ்ரீ சைலகிரி எனப்படும் ஒரே கல்லால் ஆன குன்று நடுநாயகமாக விளங்குகிறது. 


அடுத்து கமலாலயம் என்னும் நீர்நிலை உள்ளது. 


இந்நகர் பேட்டை, கோட்டை என இரு பிரிவாக உள்ளது. 


மலைக்கு மேற்புறம் அமைந்திருக்கும் இடத்தில் மிக உயர்ந்து, காற்று, மழை போன்றவற்றை தாங்கிக்கொண்டு தொழுதகையோடு நின்றிருக்கும் வரப்பிரசாதியான ஸ்ரீ ஆஞ்சநேயர் கம்பீரமாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். 
அவருக்கு நேரெதிரில் சாளக்கிராம மலையான நாமகிரியில் குகையில் நரசிம்மர் சுவாமி திருக்கோவில் உள்ளது.
 
ஸ்ரீ நரசிம்மர் கோவில் மேற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இந்நரசிம்மரை வேண்டியபடி தவக்கோலத்தில் மிகவும் சக்தி வாய்ந்த 

ஸ்ரீ நாமகிரி அம்மன் எழுந்தருளியிருக்கிறார். 

மலைக்கு கீழ்புறம் பேட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ ரெங்கநாயகி தாயார் கோவில் உள்ளது. இது மலையின் நடுப்பகுதியில் நூறு படிகள் உயரத்தில் உள்ளது. இதன் வடகிழக்கில் பலபட்டறை மாரியம்மன் திருக்கோவிலும் உள்ளது.


இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் அருள்பாலிப்பதால் மும்மூர்த்தி ஸ்தலம் என அழைக்கப்படுகிறது. எனவே தனிப்பட்ட சிவன் கோவில் எதுவும் நகரின் சுற்று வட்டாரத்தில் இல்லை.


ஸ்ரீ நாமகிரித் தாயார் கோவிலின் இருபுறமும் தேவ நீர்நிலைகளும், ஸ்ரீ ரங்கநாதர் கோவில் அருகில் கமலாலயம் என்ற நீர்நிலையும் உள்ளது.
மலையின் மேல்பகுதியில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆஞ்சநேயர் தொழுத கைகளோடு எல்லா இடத்திலும் காட்சி தருகிறார்.



 
குன்றின் சிறப்பு:
நாமக்கல் நகரின் நடுநாயகமாய் விளங்கும் குன்று தெய்வீகமான சாளக்ராமம் எனும் விஷ்ணு அம்சம் பொருந்திய மலை. 



இக்குன்று சாளக்ராம லட்சணப்படி உருவத்திலும் – அமைப்பிலும் தெய்வீகத் தன்மையிலும் சிறப்பு பெற்றது. 


ஒரே கல்லால் ஆனது, உத்திராட்சம் ஆறுமுகத்திலிநருந்து ஒரு முகம் வரை எவ்வாறு சிறப்புடையதோ அதேபோல் இரண்டு முகம் உள்ள சாளக்ராமம் மிகவும் மகிமை வாய்ந்தது. 


நவவியாகரண பண்டிதனான ஸ்ரீ ஆஞ்சநேயரால் எடுத்து வரப்பட்டது. இந்த குன்றின் ஒரு முகத்தில் குடைவறையில் சாந்தமூர்த்தியான பள்ளிகொண்ட திருக்கோலத்திலும் மறுமுகத்தில் குடைவறையில் உக்ரமூர்த்தியான ஸ்ரீ நரசிம்ம வடிவிலும் பகவான் ஸ்ரீ மஹாவிஷ்ணு காட்சி தருகிறார்.


கவிச்சக்கரவர்த்தி கம்பர் ராமாயணம் யுத்த காண்டத்தில் போர் முகத்தில் அனுமார் தோள்மீது அமர்ந்து போருக்கு ஆயத்தமான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை ‘நாமக்குன்றமீதமர்ந்த நரசிங்கமே’ என்று பாடி இருக்கிறார்.


இம் மலையை சுற்றிலும் கோட்டை இருக்கிறது. பாதுகாக்கப்பட்ட ஞாபக சின்னமாக மத்திய சர்க்காரால் கண்காணிக்கப்படுகிறது. 


மலையை சுற்றி நரசிம்ம புஷ்கரணி பலரா தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், ஷிராப்தி, கமலாலயம் சக்ரதீர்த்தம், தேவ தீர்த்தம், சத்ய புஷ்கரணீ முதலிய புண்ணிய தீர்த்தங்கள் உள்ளது.

எங்கெல்லாம் ஸ்ரீ ராம பஜனையோ, ராமாயண காலட்சேபமோ நிகழ்ந்தாலும் அங்கெல்லாம் ஆனந்தம் நிரம்பி கண்களுடன் தலையில் கூப்பிய கைகளுடன் அரூபியாக அருகில் நின்று செவிமடுக்கிறார் ஸ்ரீ ஆஞ்சநேயர் என்பதாக புராணங்கள் கூறுகின்றன. 



இந்த சொற்பொழிவுகள் அனுமன் சன்னதியில் நிகழ்ந்தால் வெகு சிறப்பாக அமைகிறது. 
namakkal-anjaneyar-vadai.jpg
முன்பு ஒரு சமயம், நவக்கிரகங்களால் அதிக குரூரமான ராகுவும், சனியும் ஸ்ரீ ஆஞ்சநேயரிடம் தோல்வியுற்றதால் ஆஞ்சநேயருக்கு கீழ்ப்படிந்தார்கள். பூவுலகில் மாந்தர்களுக்கு சனியால், ராகுவால் ஏதேனும் இடையூறு ஏற்படின், உளுந்து மற்றும் எள் – எண்ணெயாலும் செய்த வடை மாலையை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சாத்தி வழிபட்டால் சனி,  ராகு இவர்களுடைய இடையூறிலிருந்து மனிதர் விடுபடுகிறார்கள் என்பதற்காகவே தான் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றுகின்றார்கள். பிரதி மாதம் பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் அனுஷ்டிக்கப்படுகிறது.
ஆஞ்சநேயர் சிறப்பு:
  • புத்திர் பலம் யசோதைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதா ஆஜாட்யம் வாக்படுத்வஞ்ச ஹநூமத் ஸ்மரறுத்பவேத்.
  • அஞ்சனு நந்தனம் வீரம் ஜானகீ சோக நாசநம் கபீசமக்ஷந்தாரம் வந்தே லங்கா பயங்கரம்!
  • மனேஜவம் மாருத துல்யவேகம் ஜிதேந்தரியம் புத்திமதாம் வரிஷ்டம் வாதார்மஜம் வானரயூத முக்கியம் ஸ்ரீ ராமதூதம் சிரஸô நாமமி
  • உல்லங்க்கிய சிந்தோஸ் ஸலியம் சலீலம் யஸ்ஸக வஹ்நிம் ஜநகாத்மஜாயா; ஆதயாதேநைவ ததாஹ: லங்காம் நமாமிதம் பராஞ்சவிராஞ்சநேம்!
  • ஆஞ்சனேயமதிபாடலாலனம், காஞ்சனுத்ரி கமனீய விக்ரஹம், பாரிஜாத்த்ருமூல வாஸினம், பாவயாமி பவமாநந்தனம்
  • யத்ரயத்ர ரகுநாத கீர்த்தனம் த்த்ர த்த்ர க்ருதமஸத காஞ்ஜலிம் பாஷ்பவாரி பரிபூண்லோசம் மாருதிம்த மதராக்ஷ ஸாந்தகம்
  • அசாத்ய சாகதஸ்வாமின் அசாத்யம் தவகிம்வத ஸ்ரீ ராமதூத தயாசிந்தோ மத்கார்யம் காதயாப்ரபோ!

நாமக்கல் நகரில் நடு நாயகமாக விளங்கும் மலையான சாளக்ராமத்தை நேபாள தேசத்திலிருந்து எடுத்து வந்து ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி திருஉளப்படி இந்நகரில் ஸ்தாபனம் செய்து ‘ஸ்ரீ நாமகிரி’ நாமக்கல் என்னும் திருப்பெயரை நிலைநாட்டிய பெருமை ஸ்ரீ ஆஞ்சநேயரையே சார்ந்தது. 



நம்து ஐயப்பாடு நீங்கவே விஸ்வரூபத் திருக்கோலத்துடன் நிமிர்ந்து கை கூப்பி நின்றார். 


மேலே விதானம் இன்றி திறந்த வெளியில் காற்று, மழை, வெய்யில் இவைகளை லக்க்ஷயமின்றி தாங்கிக்கொண்டு கம்பீரமாக தரிசனம் கொடுக்கிறார். 


இன்னமும் வளர்ந்து கொண்டிருப்பதால் மேல் விதானம் கட்டப்படவில்லை. தவிரவும் லோக நாயகன் ஸ்ரீ நரசிம்மரே கிரி உருவில் மேல் விதானமின்றிருப்பதால் தாசனான எனக்கும் விதானம் தேவையில்லை என்று முன்னோர்கள் விதானம் கட்ட முயற்சித்தபோது ஸ்ரீ ஆஞ்சநேயர் சொப்பனத்தில் அருளியதாக சொல்லப்படுகிறது.


இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் மிகவும் பயபக்தியுடன் ஸ்ரீ ஆஞ்சனேயரிடம் தமது குறைகளை சமர்பித்து தம்மால் செய்ய முடியாத செயல்களையும் ஸ்ரீ ஆஞ்சனேயர் உதவியால் சாதித்துக்கொண்டு தங்களால் இயன்ற வழிபாடுகளை நிறைவேற்றுகிறார்கள். 


நவகிரகங்களில் குரூரமான சனி, ராகு இவர்கள் பிரீதிக்காக விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெயில் செய்த உளுந்த வடைகளால் மாலைகள் சாற்றியும் வாசனை சந்தனத்தாலும் அலங்காரம் செய்து மகிழ்ந்து தங்கள் பிரார்த்தனைகளை செலுத்துகிறார்கள். ‘


புத்திர பலம் யசோதைர்யம், நிர்பயத்வம் அராகதா, 
அஜாட்யம் வாக்படுத் வஞ்சஹநூமத் ஸ்மரணுத்பகேத்’ 


ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபட்டால் நற்புத்தி, சரீரபலம், கீர்த்தி, அஞ்சாமை, பயமின்மை, நோயின்மை, தளர்ச்சி இன்மை, வாக்கு சாதுர்யம் முதலிய நன்மைகள் ஏற்படும் என்பதற்கு ஐயமில்லை. 

பகவத் பஜனை ஸ்ரீ ராமாயண சொற்பொழிவுகள் முதலிய நற்காரியங்கள் ஸ்ரீ ஆஞ்சனேயர் சன்னதியில் நிகழ்ந்தால் வெகுசிறப்பாகவே ஆஞ்சநேயர் கிருபையால் அமைகிறது.

“யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம், தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்,
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம் மாருதிம் நமதராஷஸந்தகம்’’

எங்கெல்லாம் ஸ்ரீராம பஜனையோ, ராமாயண காலட்சேபமோ நிகழ்ந்தாலும் அங்கெல்லாம் ஆனந்த பாஷ்யம் நிரம்பிய கண்களுடன் தலையில் கூப்பிய கைகளுடன் அரூபியாக அருகில் நின்று செவிமடுக்கிறார் ஸ்ரீ ஆஞ்சநேயர் என்பதாக புராணங்கள் கூறுகின்றன.
சில இடங்களில் மேற்படி நிகழ்ச்சிகள் நடத்தினால் அனுமாருக்காக ஓர் ஆசனம் அமைத்து வழிபடுகிறார்கள். 

அதே நிகழ்ச்சிகள் ஸ்ரீ ஆஞ்சனேயர் திருச்சன்னதியில் நடந்தால் சிறப்பு பெற ஐயமென்? 

மிக சக்தி வாய்ந்த விஸ்வரூப ஆஞ்சனேயருக்கு பிரதி வருஷமும் மார்கழி அமாவாசை அன்று ஜெயந்தி விழா விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அடிக்கடியும் பக்தர்களால் சிறப்பாக அபிஷேகமும், வடைமாலை, சந்தனக் காப்பு, புஷ்பலங்காரம் முதலியவை நல்ல முறையில் கொண்டாடப்படுகிறது.

முன்பு ஒரு சமயம், நவக்கிரங்களில் அதிக குரூரமான ராகுவும், சனியும் ஸ்ரீ ஆஞ்சநேயரிடம் தோல்வியுற்றதனால் ஆஞ்சநேயருக்கு கீழ்ப்படிந்தார்கள். பூவுலகில் மாந்தர்களுக்கு சனியாலும், ராகுவாலும் ஏதேனும் இடையூறு ஏற்படின் அவர்களை திருப்திபடுத்துவதின் பொருட்டு, ராகுவுக்கு ப்ரீதியான உளுந்தும், சனிக்குப் ப்ரீதியான எள் எண்ணையாலும், செய்த வடை மாலையை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சாத்தி வழிபட்டால், சனி, ராகு இவர்களுடைய இடையூறிலிருந்து மனிதர்கள் விடுபடுகிறார்கள் என்பதற்காகவே தான் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துகிறார்கள்.
ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு உகந்தவை
1.            வடைமாலை சாற்றுதல்
(நல்லெண்ணையில் செய்த உளுந்த வடைகள்)
2.            சந்தன காப்பு
3.            வெண்ணெய் காப்பு
4.            விசேஷ திரவியங்கள்
5.            புஷ்பங்கள்
6.            காய்கறி அலங்காரம்
(அனைத்து வகையான காய்கறிகளை சேர்த்து அலங்காரம் செய்தல்)
7.            முத்தங்கி அலங்காரம்
8.            கல் முத்தங்கி அலங்காரம்

ஸ்ரீ ஆஞ்சநேயர் காரியசித்தி மந்திரம்
அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸ்த்யம் தவகிம்வத
ஸ்ரீ ராமதூத க்ருபாஸிந்தோ மத்கார்யம் ஸாதய ப்ரபோ!

view of the hill and fort from outside Thaayar sannidhi
Namagiri Thaayar Gopuram
Panguni Uttiram, chariot festival /l lThe Utsavar 





namakkal-anjaneyar-butter-2.jpg